முதல் வெள்ளிக்கிழமை – 8
இயேசுவின் திருஇருதயத்தின் எட்டாவது கொடை
எட்டாவது கொடை: அவருடைய மகிழ்ச்சி
இயேசுவின் திருஇருதயத்திலிருந்து
பொங்கி வழிகிறது மகிழ்ச்சியின் கொடை –
எழுந்து மறையும் உணர்வு அல்ல இது
நிலைத்து நிற்கிற ஒளி!
‘என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும்
உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே நான் இவற்றைக் கூறினேன்’
என்றார் இயேசு (யோவா 15:11)
அன்பு செய்யப்படுவதன் மகிழ்ச்சி இது!
அவருடைய அன்பில் நிலைக்கிற மகிழ்ச்சி இது!
காணாமாற்போய் கண்டுபிடிக்கப்படுவதன் மகிழ்ச்சி இது (லூக் 15:7)
உடைபட்டவர் உருப்பெறுவதில்,
பாவி மன்னிக்கப்படுவதில்,
சீடர் அனுப்பப்படுவதில் பெறும் மகிழ்ச்சி.
இயேசு தூய ஆவியாரில் மகிழ்ந்தார் (லூக் 10:21)
விண்ணகத்தின் மகிழ்ச்சிக்கு நம்மை அழைக்கிறார்.
அவருடைய மகிழ்ச்சி துன்பத்தை வெல்லும்
இருளிலும் ஒளிரும்!
அவரோடு இணைந்திருப்பதில் பிறக்கிறது இந்த மகிழ்ச்சி
நன்றியில் வளர்கிறது
உண்மையினால் ஊட்டம் பெறுகிறது
பணியில் பகிரப்படுகிறது (பிலி 4:4)
நாம் அவருடைய மகிழ்ச்சியைப் பெறுவோம்
அதை உலகுக்கு வழங்குவோம்
அவருடைய திருஇருதயத்தில்
நாம் காணும் மகிழ்ச்சியை நம்மிடமிருந்து யாரும் பறித்துவிட முடியாது (யோவா 16:22)
அருள்திரு தேவதாஸ் பங்கராஜ்
பங்குத்தந்தை

Leave a comment