Parish Priest’s Message – First Friday – 5 (Tamil)

முதல் வெள்ளிக்கிழமை – 5

இயேசுவின் திருஇருதயத்தின் ஐந்தாவது கொடை

அவர்தரும் ஓய்வு

இயேசுவின் திருஇருதயத்திலிருந்து புறப்படுகிறது
ஓய்வு என்னும் அவருடைய கொடை.
உடலுக்கான ஓய்வு மட்டுமல்ல.
மாறாக, சோர்ந்துபோய் நிற்கும் ஆன்மாவுக்கான ஓய்வு (மத் 11:28)

ஓடிக்கொண்டே இருப்பவர்களை அவர் அழைக்கிறார்
துயரம் நிறைந்த இதயங்களை அவர் அழைக்கிறார்
‘என்னிடம் வாருங்கள்!’ என்னும் மென்குரல் கேட்கிறது
‘நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவர்!’ (மத் 11:29).

கடினமான வேலைகளையும் கலக்கத்தையும் இந்த உலகம் தருகிறது
அது தரும் அமைதி காலைநேரப் பனிபோல வேகமாக மறைகிறது.
ஆனால், அவர் தரும் அமைதி பாறை போன்றது.
அது நமக்கு அடைக்கலமும் பாதுகாப்பும் தருகிறது (திபா 62:1)

ஓய்வு தரும் அவர் நம்மைவிட்டு ஓடிவிடுவதில்லை.
நம் வாழ்வின் புயல்களை அடக்கி நமக்கு அமைதி தருகிறார்.
அவருடைய அமைதி நம் இதயங்களில் குடிகொள்கிறது.
நேரத்தையும் இடத்தையும் அது கடந்து நிற்கிறது (யோவா 14:27).

அவர் நம் சுமைகளைச் சுமக்கிறார்.
அவற்றைத் தம் இதயத்தில் தாங்குகிறார்.
நம் துன்பங்களில் வழிநடக்கிறார்.
அவர் நம்மை விட்டு விலகுவதில்லை (எபி 13:5)

அவருடைய ஓய்வால் நாம் நிறைவடைகிறோம்.
அவருடைய அன்பால் புத்துயிர் பெறுகிறோம்.
அவரில் நம் அமைதியைக் காண்போம்.
அவருடைய இதயமே நம் இல்லம்.

அருள்திரு தேவதாஸ் பங்கராஜ்
பங்குத்தந்தை

Leave a comment