Parish Priest’s Message – First Friday – 4 (Tamil)

முதல் வெள்ளிக்கிழமை – 4

இயேசுவின் திருஇருதயத்தின் நான்காவது கொடை

அவர்தரும் அமைதி

அவருடைய திருஇருதயத்தின் ஆழத்திலிருந்து புறப்படுகிறது
கலங்கமற்ற ஆழ்ந்த அமைதி
‘என் அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்.
என் அமைதியை உங்களுக்குத் தருகிறேன்’ (யோவா 14:27).
உலகம் தருகிற அமைதி அல்ல அது.

நம் உள்ளத்தின் புயல்களை அடக்குகிற அமைதி அது.
‘அமைதியாயிரு!’ (மாற் 4:39) என்று மென்மையாக மொழிகிறார்.
போராட்டங்கள் நம்மைச் சூழும்போது
இந்த அமைதி நம் இதயங்களை நிலைநிறுத்துகிறது.
குழப்பத்தில் அடைக்கலும், அச்சத்தில் ஆறுதலும் தருகிறது.

நம் புரிதலுக்கு அப்பாற்பட்ட இந்த அமைதி
கிறிஸ்துவில் நம் இதயங்களையும் உள்ளங்களையும் பாதுகாக்கிறது (பிலி 4:7).
அனைத்துச் சுவர்களையும் உடைக்கிற இது (எபே 2:14)
தந்தையுடன் நம்மை ஒப்புரவாக்குகிறது.

அவருடைய அமைதி நம்மோடு உடனிருக்கிறது
அன்பில் தியாகத்தில் கனியும் அவருடைய அமைதி!
அவருடைய காயங்களால் நாம் குணமடைந்தோம்,
அவருடைய இதயத்தில் நாம் அமைதி காண்கிறோம் (மத் 11:28-29).

அவருடைய அமைதியின் தூதுவர்களாய் வாழ்வோம் நாம்!
இந்த உலகில் அமைதியை ஏற்படுத்துவோம் (மத் 5:9).
அவருடைய திருஇருதயம் நமக்கு ஒன்றிப்பைக் கற்பிப்பதாக!
நம் அனைவரையும் ஒருங்கிணைத்துக் காப்பதாக (கொலோ 3:15).

அவருடைய அமைதி நம்மை முழுமையாக்குகிறது!
நலம் தருகிறது, புதுப்பிக்கிறது, ஒப்புரவாக்குகிறது.
அவருடைய புனித கொடையை நாம் வரவேற்போம்
அன்பின் நிலையான இறை அமைதியைப் பெற்றுக்கொள்வோம்.

அருள்திரு தேவதாஸ் பங்கராஜ்
பங்குத்தந்தை

Leave a comment