Parish Priest’s Message – First Friday – 3 (Tamil)

முதல் வெள்ளிக்கிழமை – 3

இயேசுவின் திருஇருதயத்தின் மூன்றாவது கொடை

அவர் நம்மில் குடிகொள்ளும் கொடை

நம் இதயத்தின் கதவுகளை இயேசு தட்டுகிறார் (திவெ 3:20)
அவருடைய அழைப்பு மென்மையாக இருக்கிறது.
‘என்னை அனப்பு செய்பவர் என் வார்த்தையைக் கடைப்பிடிப்பார்,’
‘என் தந்தையும் அவரிடம் அன்புகூர்வார்’ (யோவா 14:23) என்கிறார் இயேசு.

அவருடைய அன்பின் புனிதமான மறைபொருளில்
நம் இதயங்களில் அவர் குடிகொள்ள விpரும்புகிறார்.
வந்து செல்லும் விருந்தினர்போல அல்ல, மாறாக,
நம்மிலேயே தொடர்ந்து குடிகொள்பவராக நம்மிடம் வருகிறார் (யோவா 15:4).

நாம் அவருடைய ஆவியாரின் ஆலயங்கள்
நம் உள்ளங்களில் அவர் குடிகொள்கிறார் (1 கொரி 6:19).
தம் நிறைவால் அவர் நம்மை நிறைவாக்குகிறார்
அன்பிலும் அருளிலும் நம்மை நிலைநிறுத்துகிறார் (எபே 3:17-19).

அவருடைய திருஇருதயம் நமக்காகத் துடிக்கிறது.
உலகம் தராத அமைதியை அது தருகிறது (யோவா 14:27).
‘நான் உங்களில் நிலைத்திருப்பதுபோல, நீங்களும் என்னில் நிலைத்திருங்கள்’ (யோவா 15:5)
கொடியும் செடியும்போல இணைந்திருக்கிறார்.

அவர் நம்மில் குடிகொள்ளும்போது
நம் இதயங்கள் அவருடைய இதயமாக மாறுகிறது.
அவருடைய இரக்கத்தின் பாத்திரங்களாக நம்மை மாற்றுகிறார்.
அவருடைய எதிர்நோக்கின், ஒளியின் சான்றுகளாக மாற்றுகிறார் (2 கொரி 4:7).

திறந்த இதயங்களோடு அவரை நாம் வரவேற்போம்.
அவருடைய இதயம் நம் வாழ்வை உருமாற்றுவதாக!
அவர் நம்மில் குடிகொள்வது அவர் நமக்கு அருளும் கொடை.
நீடித்த ஒன்றிப்பின் முன்சுவை (கொலோ 1:27).

அருள்திரு தேவராஜ் பங்கராஜ்
பங்குத்தந்தை

Leave a comment