Parish Priest’s Message – First Friday – 2 (Tamil)

முதல் வெள்ளிக்கிழமை – 2

இயேசுவின் திருஇருதயத்தின் இரண்டாவது கொடை

வார்த்தை என்னும் கொடை

இயேசுவின் தூய்மைமிகு இதயத்தில் குடியிருக்கிறது அவருடைய வார்த்தை –
கடவுளின் வார்த்தை (யோவா 1:14),
நம் பாதைக்கு ஒளியாகும் வார்த்தை (திபா 119:105).

உண்மையையும் ஞானத்தையும் தேடி (நீமொ 2:6)
அதன் பக்கங்களை நாம் திருப்பும்போது
அவருடைய இதயம் நோக்கி நம் இதயம் திரும்புகிறது.
ஒவ்வொரு சொல்லும்
அவருடைய குரலாக நம் இதயத்தில் ஒலிக்கிறது (திவெ 3:20).
நாம் கேட்கிற ஒவ்வொரு சொல்லையும் தியானிக்கிறோம் ஆழமாக (திபா 119:15).

அன்பின் இரக்கத்தின் கதைகளில்
நாம் நம் வாழ்வின் கதையாடல்களைக் காண்கிறோம் (1 பேது 2:9).

இறைவார்த்தையை வாசிக்கும் நம் இதயங்கள் மாற்றம் பெறுவனவாக! (உரோ 12:2)
நம் வாழ்க்கை அவருடைய போதனையால் மாற்றம் பெறுவதாக! (மத் 7:24).

இறைவார்த்தையைத் தழுவிக்கொள்வோம் (கொலோ 3:16).
அது விடுக்கும் அழைப்புக்குச் செவிகொடுப்போம் (யாக் 1:22).
எதிர்நோக்கின் இரக்கத்தின் செய்தியைப் பகிர்வோம் (2 கொரி 1:3).

நம் இதயத்தின் மௌனத்தில் அவருக்கு நெருக்கமாவோம் (திபா 46:10).
அவருடைய இறைவார்த்தை என்னும் கொடையில்
நம் வலிமையைக் காண்போம் (பிலி 4:13).

இந்த மாதம் இனிய மாதமாகட்டும்!

அன்புடன்,

அருள்திரு ப. தேவதாஸ்
பங்குத்தந்தை

Leave a comment