முதல் வெள்ளிக்கிழமை
இயேசுவின் திருஇருதயத்தின் முதல் கொடை
இன்றிலிருந்து ஒன்பது மாதங்கள்,
முதல் வெள்ளி அன்று இயேசுவின் இதயத்தின் அருள்கொடைகளை
நாம் சிந்திப்போம்.
முதல் கொடை: மன்னிப்பு.
கடவுளை நோக்கிய பயணத்துக்கான கதவுகளைத் திறக்கிறது மன்னிப்பு.
அவர் வெறுமனே நம் பாவக் கணக்கை அழிக்கவில்லை.
மாறாக, நம்மைப் புதுப்படைப்பாக மாற்றுகிறார்.
புதுப்படைப்பாக மாறுகிற நாம் நன்றியுணர்வு பெற்றவர்களாக வளர்கிறோம்.
கடவுள் வழங்குகிற மன்னிப்பு இயேசுவின் வழியாகவே நடந்தேறுகிறது.
ஆகையால்தான் பவுல், ‘அவர் என்னை அன்பு செய்தார். எனக்காகத்
தன்னையே கையளித்தார்’ என எழுதுகிறார்.
அவரால் மன்னிப்பு பெறுகிற நாம் ஒருவர் மற்றவரை மன்னிக்கும் ஆற்றல் பெறுகிறோம்.
இன்று, இயேசுவின் திருஇருதயத்தின் திருமுன் நின்றுகொண்டு
நமக்கெதிராக மற்றவர்கள் செய்த தீங்குகளை எண்ணிப் பார்த்து
அவர்களை மன்னிக்க முயற்சி செய்வோம்.
நம் இதயத்தின் மௌனத்தில், ‘நான் உன்னை மன்னிக்கிறேன்!’ என்று கூறுவோம்.
இயேசுவின் திருஇருதயம் மன்னிப்பு என்னும் கொடையை மட்டும் நமக்கு வழங்கவில்லை.
மாறாக, மற்றவர்களை மன்னிக்கும் ஆற்றலையும் வழங்குகிறார்.
இந்த மாதம் இனிய மாதமாகட்டும்!
அன்புடன்,
அருள்திரு ப. தேவதாஸ்
பங்குத்தந்தை

Leave a comment